/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக பா.ஜ.வில் புதிய பதவியை உருவாக்க கட்சி மேலிடம் முடிவு BJP | RSS | TN Politics | Party Posting
தமிழக பா.ஜ.வில் புதிய பதவியை உருவாக்க கட்சி மேலிடம் முடிவு BJP | RSS | TN Politics | Party Posting
தமிழக பாஜவில் உருவாகும் புதிய பதவி! கட்சிக்கு புத்துணர்வு அளிக்க முயற்சி தமிழக பா.ஜ.வில், அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு பதிலாக, தலைமை அலுவலக பொதுச்செயலர் என்ற புதிய பதவியை உருவாக்க, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.வில் அமைப்பு பொதுச்செயலர் பதவிக்கு, தலைவருக்கு இணையான அதிகாரம் உண்டு. முழு நேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருப்பவர்களே, இப்பதவிக்கு வர முடியும். கடந்த 2015ல் இருந்து 2026 வரை, தமிழக பா.ஜ. அமைப்பு பொதுச்செயலராக கேசவ விநாயகன் இருந்தார்.
அக் 22, 2026