3 பேருக்கு சம்மன் சிபிசிஐடி அதிரடி | Breaking | Vengaivayal case
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது இந்த வழக்கில் 300க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர் சிலரிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினர் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர் அதில், போலீஸ் உட்பட 3 பேரின் பெயர்கள் இடம் பெற்றன இந்த வழக்கு விசாரணை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் வரும் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மார் 05, 2025