உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கே.சி.ஆர் மகள் கவிதா அதிரடி ஆடிப்போன பிஆர்எஸ் கட்சி | BRS leader Kavitha resignation | MLC post

கே.சி.ஆர் மகள் கவிதா அதிரடி ஆடிப்போன பிஆர்எஸ் கட்சி | BRS leader Kavitha resignation | MLC post

என்னையா சஸ்பென்ட் பண்றீங்க...! அப்பா, அண்ணனுக்கு கவிதா வார்னிங் MLC பதவியை தூக்கி எறிந்தார் தெலுங்கானா மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை மிக வலிமையான கட்சியாக விளங்கிய பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி, 2023ல் ஆட்சி பறிபோன பிறகு இன்று ஆடிப்போயிருக்கிறது. பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்வராக இருந்தபோது காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அணை கட்டப்பட்டது. மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், 2023 இறுதியில் அணையின் 5 துாண்கள் 4 அடிக்கு கீழே இறங்கியதால் தேக்கி வைத்த நீரை வீணாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அணை கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாக புகார் கிளம்பியது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மண் உறுதித்தன்மை இல்லாத இடத்தில் அணை கட்டியதுதான் பிரச்னைக்கு காரணம் என, விசாரணைக்குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து, அணை கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ரேவந்த் ரெட்டி தலையைிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் பரிந்துரை வழங்கியது. இது, சந்திரசேகர ராவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனிடையே, காலேஸ்வரம் அணை கட்டுமானத்தில் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் ஹரிஷ் ராவ் முறைகேடுகளை செய்ததாக, சந்திரசேகர ராவின் மகள் கவிதா பகீர் குற்றச்சாட்டை கூறினார். பிஆர்எஸ் முன்னாள் எம்பி சந்தோஷ் குமார் ராவ் மீதும் ஊழல் புகாரை சுமத்தினார். இதனால் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்சக் கட்டத்தை எட்டியது. சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கும் கவிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் சந்திர சேகர ராவ் மற்றும் செயல் தலைவர் கே.டி.ராமராவ் ஆகியோருக்கு ஹரீஷ் ராவ், சந்தோஷ் நெருக்கடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, கவிதாவை சஸ்பென்ட் செய்வதாக, சந்திரசேகர ராவ் அறிவித்தார். இதனால், பிஆர்எஸ் கட்சிக்குள் கடும் பூசல் ஏற்பட்ட நிலையில், கட்சியை விட்டே விலகுவதாக, கவிதா இன்று அறிவித்துள்ளார். தான் வகித்து வந்த எம்எல்சி பதவியையும் கவிதா ராஜினாமா செய்தார். தான் கட்சியை விட்டு வெளியேற ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் செய்த கூட்டு சதிதான் காரணம். அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு என் மீது, அப்பாவும் அண்ணனும் சஸ்பென்ட் நடவடிக்கை எடுத்தனர். என் தரப்பு விளக்கத்தை 2 பேருமே கேட்காததால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் ஹரிஷ் ராவ் சரணடைந்து விட்டார். ரேவந்த் ரெட்டி தூண்டுதல் பேரில்தான் பிஆர்எஸ் கட்சியை நாசமாக்கவும், கே.சி.ஆர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ஹரிஷ் ராவ் சதி செய்து வருகிறார். ஹரிஷ் ராவுக்கு மாநில நலனோ, கட்சி நலனோ முக்கியம் இல்லை. அவர் பேச்சை நம்ப வேண்டாம். இல்லாவிட்டால், அப்பாவுக்கும், அண்ணனுக்கும் என் நிலைமைதான் வரும்; நாளை அவர்களையும் விரட்டி விட்டு கட்சியை ஹரீஷ் ராவ் கைப்பற்றி விடுவார் என கவிதா பகீர் புகாரை கூறினார்

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி