இந்த பட்ஜெட் அனைவருக்குமானது; மோடி பெருமிதம் | Budget 2025 | PM Modi | Union Budget
முக்கிய மசோதாக்கள் காத்திருக்கு! 2025 பட்ஜெட் புதிய உத்வேகம் தரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக பிரதமர் மோடி பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க வேண்டும் என அன்னை லட்சுமியை பிரார்த்திக்கிறேன். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். மகாலட்சுமி வெற்றியையும், விவேகத்தையும் தருபவர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டு விட்டு வருகிறேன். 3வது முறையாக சேவையாற்ற நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். பாஜவின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இது.