உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் பதவி? மோடியின் அதிரடி!

தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் பதவி? மோடியின் அதிரடி!

மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு வருவதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்துக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் எவரும் மத்திய அமைச்சரவையில் தற்போது இல்லை. தவிர தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சில எம்.பிக்கள் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளனர். இவர்களில் சிலர் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தி.மு.க., தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான அரசியல் கணக்குகளும் அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே சில பதவிகள் காலியாக உள்ளன. ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அமைச்சர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் இணையமைச்சர் பி.எல். வர்மா ஆகியோரின் ராஜ்யசபா பதவிக்காலமும் விரைவில் முடிவடைகிறது. #NarendraModi #PMModi #ModiCabinet #CabinetReshuffle #CabinetExpansion #UnionCabinet #CentralGovernment #BJP #NDA #IndianPolitics #DelhiPolitics #PoliticalNews #BreakingNews #LatestNews #TamilNews #TamilNaduNews #IndiaNews #பிரதமர்மோடி #நரேந்திரமோடி #மத்தியஅமைச்சரவை #அமைச்சரவையில்மாற்றம் #பாஜக #தேசியஜனநாயககூட்டணி #இந்தியஅரசியல் #தர்மேந்திரபிரதான்

ஆக 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !