ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தின் நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சிசிடிவி காட்சி | CCTV | Armstrong
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவே 8 பேர் சரணடைந்த நிலையில், பின்னர் நடந்த விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும், போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். அவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடம், மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீசார் இன்று காலை அழைத்து சென்றனர். அப்போது போலீசை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நடுங்க வைக்கும் CCTV காட்சி வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில் இன்று என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடமும் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.