மாணவர்கள் 10 மொழி படிக்க நான் ஊக்குவிப்பேன் Andhra cm |Chandra Babu |three language policy issue|
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி மும்மொழி கொள்கையை வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். ஆனால் மும்மொழி திட்டத்தில் இந்தி கட்டாயம் இல்லை, தென் மாநில மொழிகளைக் கூட மூன்றாவது மொழியாக கற்கலாம் என்கிறார் பாஜ தலைவர் அண்ணாமலை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் மும்மொழி கொள்கை நல்ல விஷயம்தான் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தெரிவித்துள்ளார். மொழி என்பது தொடர்புகொள்வதற்கான ஒரு வழிமுறை மட்டும்தான். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலக அளவில் சிறப்பாக இருப்பது நமக்கு தெரியும். அறிவு வேறு, மொழி வேறு. ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பல்கலையிலும் வெளிநாட்டு மொழி உள்பட 10 மொழிகளை படிக்க நான் ஊக்கம் அளிக்க போகிறேன். பிற மொழிகளை படிப்பதால் மாணவர்கள் அந்த இடங்களுக்கு சென்று வேலை செய்ய முடியும். 3 மொழிகள் மட்டும் அல்ல; பல மொழிகள் படிக்க நான் ஊக்கமளிப்பேன். தெலுங்கு தாய்மொழி. அதனால் அதை படிக்க ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆங்கிலம் வாழ்வாதாரத்துக்கான சர்வதேச மொழி. அதனால் அதையும் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் மக்களுடன் எளிதாக பழக இந்தி கற்பது நல்லது என்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு கூறினார்.