மாஜி டிஜிபி ரவியை துரத்தும் பெருங்கூட்டம்-பரபரப்பு | CM Vijay | IPS Ravi | DMK vs TVK | TN Election
பெரிய பெரிய நிறுவனங்கள், அரசியல் நிபுணர்கள் எல்லாம் விஜயை தவறாக கணித்தபோது, தவெக தான் வெல்லும் என்று அடித்து சொன்னது ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி டீம் நடத்திய சர்வே. அவரது கணிப்பு உண்மையான நிலையில் ரவிக்கு மிகப்பெரிய அளவில் மவுசு கூடி விட்டது. அவரை இப்போது ஒரு கூட்டமே சுற்றி சுற்றி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரவி, 1991ல் ஐபிஎஸ் அதிகாரியான ரவி, 32 ஆண்டுகள் பணிபுரிந்து டி.ஜி.பி., ரேங்கில் 2022ம் ஆண்டு ஓய்வு பெற்றார். சட்டசபை தேர்தலையொட்டி தொகுதிக்கு 10 பேர் என ஓய்வுபெற்ற போலீசார் 2,340 பேர் மூலம் 2.34 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி அதன் முடிவை அறிவித்தார். த.வெ.க., 41 சதவீத ஓட்டு பெற்று 121 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் விஜய் ஆட்சி அமைப்பார் என்று கூறினார். தி.மு.க., கூட்டணியில் போட்டியிட ரவி சீட் கேட்டார். கிடைக்காத விரக்தியில் தி.மு.க.,வுக்கு எதிராக பேசுகிறாார். அவர், த.வெ.க.,வின் இரண்டாம் கட்டத் தலைவர் செங்கோட்டையனின் நெருங்கிய உறவினர். அதனால் த.வெ.க., ஆட்சியை பிடிக்கும் என கூறுகிறார் என்றெல்லாம் ரவி மீது கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், ரவி கணித்தபடி த.வெ.க., அசத்தல் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு பக்கபலமாக இருப்பவர்களில் ரவியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. #TVKVijay #TNElection2026 #IPSRavi #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #Seeman #Annamalai #EPS #Modi #AmitShah #TamilNaduPolitics #ElectionDebate #TamilPolitics #Voting2026 #ElectionAnalysis #PoliticalRivalry #Campaign2026