/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் அலுவலகத்தை இடம் மாற்ற அவசரம் காட்டும் அரசு! Vijay | CM Office | TVK
முதல்வர் அலுவலகத்தை இடம் மாற்ற அவசரம் காட்டும் அரசு! Vijay | CM Office | TVK
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பல முதல்வர்கள் இந்த அறையை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாரம்பரிய கட்டடத்தில், ஜன்னல்கள் எங்கும் இருக்காது. வெளிக்காற்று உட்புகும் அளவுக்கு, காற்றோட்டமான சூழல் இல்லை. குளிர்சாதன இயந்திரம் உதவியுடன், அறைகள் குளிர்விக்கப்படுகின்றன. தற்போதைய முதல்வர் விஜய், காற்றோட்டமான அறையை விரும்புகிறார். கார்ப்பரேட் அலுவலகம் போல, இயற்கை சூழலை ரசிக்கும்படி, தனது அறை கண்ணாடி மாளிகை போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஜூலை 27, 2026