மேகதாது அணை! கர்நாடகாவின் அடுத்தகட்ட பகீர் நடவடிக்கை!
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி லோக்சபாவில் தெரிவித்தார். இதற்கும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்காக கர்நாடக அரசு வழங்கிய, விரிவான திட்ட அறிக்கையில் குளறுபடி இருப்பதாகவும், சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கும்படியும் கூறி மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது.
ஆக 20, 2026