வழக்கு தொடர்பாக தேவையற்ற கருத்துகளை பகிர வேண்டாம் | TVK MLA Arrest | Arul Vignesh | Kallakurichi MLA
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்து தமிழக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. அதன் அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கடந்த 23ம் தேதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. துவக்கத்தில் உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, சென்னை நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணையை மேற்கொண்டார். புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.