/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ராஜ்ய சபா தலைவரை நீக்க நோட்டீஸ் கொடுப்பதா? | Congress | Jagdeep dhankar |JP Nadda|
ராஜ்ய சபா தலைவரை நீக்க நோட்டீஸ் கொடுப்பதா? | Congress | Jagdeep dhankar |JP Nadda|
பார்லி நடைமுறை பற்றி கார்கே பேசுவது கேலிக்கூத்து பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இரு சபைகளையும் நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. லோக்சபா, ராஜ்ய சபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ராஜ்ய சபா இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் விவாதிப்பதற்காக கொடுத்திருந்த ஆறு நோட்டீஸ்களையும், அதில் இடம் பெற்றிருந்த விஷயங்களையும் நிராகரிப்பதாக ராஜ்ய சபா தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். , விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசியது குறித்து விவாதிக்க வேண்டும் என்பது 6 நோட்டீஸ்களில் ஒன்று.
டிச 12, 2024