உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு | Cm Stalin | DMK | Congress MLA | Tenkasi

காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு | Cm Stalin | DMK | Congress MLA | Tenkasi

தென்காசி தொகுதி எம்எல்ஏ பழனி நாடார், திமுக ஆட்சியை விமர்சித்து கதறி அழுதது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரசில் தற்போது 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களின் தொகுதிகளில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என திமுக ஆதரவு நிறுவனம், உளவுத்துறை, தனியார் நிறுவனம் என மூன்று சர்வே சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. அவை அளித்த அறிக்கை வழியே காங்கிரசின் 12 எம்எல்ஏக்கள் மீது அவர்களின் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அவர்கள் போட்டியிட்டால் காங்கிரஸ் வெற்றி பெறாது என்றும், அதற்கான காரணங்கள் குறித்தும், சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை விபரம் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுகுறித்த தகவல்கள் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தெரியவந்தது. இந்த பட்டியலில் தென்காசி தொகுதி எம்எல்ஏ பழனி நாடார் இடம் பெற்றுள்ளார். எனவே தனக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என பழனி நாடாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த சூழலில் அவர் அளித்த பேட்டி, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. . #DMK #congress #tenkasi #tenkasimla #palaninadar

நவ 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ