பெற்றோரை இழந்த குழந்தைகள் தத்தெடுக்க ராகுல் முடிவு! | Congress MP Rahul adopt 22 children | Kashmir
22 குழந்தைகள் கல்வி செலவை ஏற்றார் ராகுல்! யார் இவர்கள்? காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி டூரிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. பாகிஸ்தானின் பல ஏவுகணை, ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டது. இருந்தும் காஷ்மீரின் பூஞ்ச் உள்பட சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 27 பேர் இதில் இறந்தனர். தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் முடிவு செய்துள்ளார். காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா இந்த தகவலை உறுதி செய்தார். பாகிஸ்தான் இடையேயான மோதலில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் ஏற்றுள்ளார். ராகுல் மே மாதம் பூஞ்சிற்குச் வந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார். பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்த பள்ளி குழந்தைகளின் பட்டியலை தயாரிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். நாங்கள் அந்தப் பட்டியலை அவரிடம் சமர்ப்பித்தோம், உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவி தொகை தொடரும் என தாரிக் கூறி உள்ளார்.