உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / யார் இந்த சந்திரசேகர்? போஸ்டரால் பரபரப்பு | Chandrasekar | BJP | Covai | Annamalai

யார் இந்த சந்திரசேகர்? போஸ்டரால் பரபரப்பு | Chandrasekar | BJP | Covai | Annamalai

கோவை தெற்கு மாவட்ட பாஜ தலைவராக சில தினங்களுக்கு முன்பு சந்திரசேகர் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதியில் சந்திரசேகருக்கு எதிராக பாஜவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். யார் இந்த சந்திரசேகர்? என்ற தலைப்பில் பாஜவை சேர்ந்த நடராஜன் என்பவர் பெயரில் போஸ்டர்ள் ஒட்டப்பட்டு உள்ளன. அண்ணாமலையை தெற்கு மாவட்டத்திற்குள் வரவிடாமல் எதிர்த்தவர் இன்று மாவட்ட தலைவரா?என்ற வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை தெற்கு மாவட்ட பாஜ தலைவராக இருந்தவர் வசந்தராஜன். உட்கட்சி தேர்தலில் மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். இவர், வசந்தராஜனுக்கு நெருக்கமானவர். பதவி கைவிட்டு போனாலும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, தமக்கு நெருக்கமானவருக்கே வசந்தராஜன் பதவி பெற்று தந்ததாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதன் வெளிப்பாடாகவே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கலாம் என விவரம் அறிந்த பாஜவினர் கூறுகின்றனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி