/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கைகளை கட்டி.. குழாயில் துடி துடிக்க: கொரோனா செய்தி சொன்னவருக்கு சீனாவில் சோகம் | Zhang Zhan
கைகளை கட்டி.. குழாயில் துடி துடிக்க: கொரோனா செய்தி சொன்னவருக்கு சீனாவில் சோகம் | Zhang Zhan
சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. இது உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்தது. அப்போது 2020ல் வூஹானுக்கு சென்று, கொரோனா பரவல் குறித்து, சீன பத்திரிகையாளரான ஜாங் ஜான் செய்தி வெளியிட்டார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, 2020 மே மாதம் அவர் கைது செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2021ல் சிறையில் இருந்தபோதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
செப் 23, 2025