/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / ஹரியானாவில் 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சம் | Delhi | Earthquake                                        
                                     ஹரியானாவில் 2வது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சம் | Delhi | Earthquake
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று 2வது நாளாக நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, ஹரியானாவின் ஹஜ்ஜார் மாவட்டத்தில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. ஹரியானாவின் ஹஜ்ஜார், பரிதாபாத், ரோஹ்தக் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஹரியானாவின் ஹஜ்ஜார் மாவட்டத்தில் நேற்று 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது டெல்லி மற்றும் குருகிராம், நெய்டா சுற்றுவட்டார நகரங்களில் வீடுகள், கட்டங்கள் குலுங்கின. தொடர்ந்து 2வதுநாளாக இன்றும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
 ஜூலை 11, 2025