உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆடம்பர அரண்மனையில் வசித்த விவிஐபி யாரு தெரியுமா? Delhidelhi civil lines area cm bungalow BJP rel

ஆடம்பர அரண்மனையில் வசித்த விவிஐபி யாரு தெரியுமா? Delhidelhi civil lines area cm bungalow BJP rel

2015 மற்றும் 2020ல் நடந்த டில்லி சட்டசபை தேர்தல்களில் இமாலய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜவிடம் படுதோல்வியை சந்தித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி சந்தித்த மிகப்பெரிய தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த ஷீஷ் மஹால். கண்ணாடி அரண்மனை போன்ற இந்த பங்களாவில்தான் டில்லி முதல்வராக 10 ஆண்டு பதவி வகித்தபோது கெஜ்ரிவாலும் குடும்பத்தினரும் வசித்தனர். டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் இந்த பங்களா உள்ளது. கெஜ்ரிவால் குடியேறும்போது சாதாரணமாகத்தான் இருந்தது. அவுர் குடியேறிய பிறகு மக்கள் வரிப்பணம் 45 கோடி ரூபாயை செலவழித்து, அந்த பங்களாவில் பல ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டது. 21 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் 8 பெட்ரூம்கள் உள்ளன. கழிவறை முதல் பணியாளர்கள் அறை வரை மூலை முடுக்கெல்லாம் ஏசி வசதி. 16 பிரமாண்ட சோனி டிவிக்கள், பெரிய பெரிய பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், ஸ்டீம் ஓவன், மைக்ரோவேவ் ஓவன் , 8 சோஃபா செட்டு, அதிநவீன ஸ்மார்ட் டாய்லெட்டுகள், ஹீட்டர் சாதனங்கள் உள்ளிட்ட பலப்பல வசதிகளுக்காக மட்டும் சில பல கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளது. அலங்கார மின் விளக்குகள் மாடி படிக்கட்டுகளில் அலங்கார கைப்பிடிகள் மரக்கதவுகள் மற்றும் கண்ணாடி கதவுகள் ஆங்காங்கே அலங்கார தூண்கள் என பங்களாவை ரிச் லுக்காக மாற்ற இன்னும் பல கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளன.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை