திமுக அழைப்புக்கு ஓகே சொன்ன பழனிசாமி | delimitation row | stalin all party meet | ADMK Palaniswami
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தால் தமிழகத்தில் லோக் சபா தொகுதிகள் குறைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதோடு அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள், தவெக, நாம் தமிழர், விசிக உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு கடிதம் போனது. இதற்கிடையே தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்தார். இருப்பினும் ஸ்டாலின் அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டம் திட்டமிட்டபடி மார்ச் 5ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்து விட்டன. பிரதான எதிர்கட்சியான அதிமுக பங்கேற்குமா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் நாங்கள் உறுதியாக பங்கேற்போம் என்று பழனிசாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.