உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காஷ்மீர் பட்ஜெட் பற்றி பாஜ பெண் எம்எல்ஏ தேவ்யானி ராணா காரசார பேச்சு Devyani Rana Speech at Kashmir

காஷ்மீர் பட்ஜெட் பற்றி பாஜ பெண் எம்எல்ஏ தேவ்யானி ராணா காரசார பேச்சு Devyani Rana Speech at Kashmir

ஜம்மு - காஷ்மீருக்கான பட்ஜெட்டை முதல்வர் ஒமர் அப்துல்லா இரு தினங்களுக்கு முன் தாக்கல் செய்தார். பல்வேறு திட்டங்களுக்காக 1.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் உரை மீதான விவாததத்தில், பாஜவை சேர்ந்த இளம் பெண் எம்எல்ஏ தேவ்யானி ராணா பேசினார். பாஜ மூத்த தலைவர் தேவேந்திர சிங் ராணாவின் மகளான இவர், தந்தையின் மறைவுக்குப் பின், கடந்த ஆண்டு நாக்ரோட்டா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 30 வயதாகும் தேவ்யானி சட்டசபையில் நேற்று முதல் முறையாக உரை நிகழ்த்தினார். நாம் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பப்பட்டுள்ளோம். மக்களின் தேவைகளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பேரிடர் மேலாண்மைக்கு கடந்த ஆண்டு 719 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், வெறும் 350 கோடி ரூாபய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், அடிக்கடி மேகவெடிப்பு ஏற்படுகிறது. நிலச்சரிவு, வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கை தேவை. கல்வித்துறைக்கான நிதி குறைவு. சுகாதார பணியாளர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அறிக்கப்பட்டாலும், அதற்கு ஏற்ப போதிய பஸ் வசதிகள் இல்லை என, அவர் பேசினார். பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்ந்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி, இன்னும் எப்படியெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்ற வகையில் தேவ்யானி பேசினார். அவரது இந்த கன்னிப் பேச்சு, சட்டசபையில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாஜ எம்எல்ஏவின் பேச்சுக்கு கட்சி பேதம் கடந்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகரும் தேவயானிக்கு வாழ்த்து கூறியதுடன், புதிய எம்எல்ஏவுக்கு அனைவரும் ஆதரவு அளிப்போம். அவரின் செயல்பாடுகளை ஊக்குவிப்போம் என்றார். ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் நடந்த இந்த நிகழ்வு நாடு முழுதும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. #DevyaniRana| JammuKashmirAssembly|BJPMLA| JK| JammuKashmir| KashmirBudget|

பிப் 09, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Moorthy
பிப் 09, 2026 10:14

நம்ம ஊரு "நாயகன்" இவரது நிஜமான கன்னி பேச்சை கேட்கவேண்டும்


Bala Sethuram
பிப் 09, 2026 10:09

நம்ம பெரியாரின் பேரன் இரு நூறு ரூவா உபி உளறி கொட்டி தமிழ் நாட்டின் பெயரை ராஜ்ய சபையில் இதே போல வாய்ப்பு கிடைச்சப்போ நாறடித்து விட்டாரே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி