டி.ஐ.ஜி. வருண்குமார் வழக்கிற்கு பிரேக் | DIG Varunkumar | Seeman | NTK
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி கிரிமினல் கோர்ட்டில் நடந்து வருகிறது. சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக வருண்குமார் கூறி உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட மோதல் சமீபத்தில் உச்ச கட்டம் அடைந்தது. மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தனர். அண்மையில் இந்த வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். அதே நேரம் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் நாம் தமிழர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மனு மீதான விசாரணை இன்று நீதிபதி விக்டோரியா முன் நடந்தது. சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வருண் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூறி விசாரணை ஆகஸ்டு 4க்கு ஒத்தி வைக்கப்பட்டது.