உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜாபர் சாதிக் பணம் எங்கே? குற்றப்பத்திரிக்கையில் பகீர் | Director Ameer | Jaffer Sadiq | ED

ஜாபர் சாதிக் பணம் எங்கே? குற்றப்பத்திரிக்கையில் பகீர் | Director Ameer | Jaffer Sadiq | ED

சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக். தமிழ் சினிமாவில் சில படங்களையும் தயாரித்துள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மார்ச் 9ல் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரும் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம், மனைவி பானு, சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீமை கைது செய்தனர். ஜாபர் சாதிக், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டன. சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில், அமலாக்க துறையினர் 302 பக்க குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 18ல் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம் மற்றும் சினிமா இயக்குனர் அமீர் உட்பட 12 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி