சத்தியம் வெல்லும் என பதிவு போட்டு நீக்கம்! | DMDK | Premalatha | Palanisami | Rajya Sabha MP Seat
சீட் இல்லை என கைவிரித்த பழனிசாமி! பிரேமலதா அப்செட்! ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள திமுகவை சேர்ந்த சண்முகம், வில்சன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, அதிமுக சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம், ஜூலை 24ல் முடிகிறது. அந்த பதவிகளுக்கு தேர்தல் ஜூனில் நடக்க உள்ளது. இந்த சூழலில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறி உள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா எந்த பதிலும் கூறாமல் மவுனமாக சென்றார். முன்னதாக அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என லோக்சபா தேர்தலின் போதே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்பட்டது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வாமாக அறிவிப்போம் என பிரேமலதா கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பழனிசாமி கொடுத்த விளக்கம் தேமுதிகவினருக்கு இடியை இறக்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்புக்கு பின் மறைந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் சமூக வலைதள பக்கத்தில் சத்தியம் வெல்லும் நாளை நமதே..! என பதிவிடப்பட்டது. சில நிமிடங்களில் அந்த பதிவு காரணம் கூறாமல் நீக்கப்பட்டுள்ளது.