நயினார் வெளியிட்ட திமுக நகர் மன்ற தலைவர் மிரட்டல் ஆடியோ | DMK | Nainar Nagendran | TN BJP leader
தெருக்குள்ள வந்தா கட்டி வச்சுருவேன் பாஜ நிர்வாகியை மிரட்டிய திமுக மக்களுக்கு உதவ முயன்ற பாஜ நிர்வாகியை திமுக நகராட்சி தலைவர் மிரட்டும் ஆடியோவை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். பழனியில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் கிடைக்க திண்டுக்கல் பாஜ மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி முயற்சி எடுத்துள்ளார். அவரை பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி கடுமையாக திட்டி மிரட்டி உள்ளார். திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்தால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா? எங்களின் மக்கள் பணியை திமுகவால் ஒடுக்கிவிட முடியாது! மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர்களை கண்டால் திமுகவுக்கு அப்படியென்ன ஒவ்வாமை என புரியவில்லை என்று நயினார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.