தேமுதிக, பாமக, பன்னீர் அணி IN, விஜய் கட்சி OUT | DMK | CM Stalin | Stalin Meeting | Vijay
கூட்டணி தலைவர்களுக்கு CM ஸ்டாலின் வீட்டில் விருந்து பேசியது என்ன? தனது 50வது ஆண்டு திருமண நாளை ஒட்டி சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் ஏற்பாடு செய்த விருந்துக்கு, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் 10 பேருக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவர்கள் வாழ்த்து தெரிவித்து பரிசு பொருட்கள் வழங்கினர். விருந்து முடிந்ததும், துணை ஜனாதிபதி தேர்தல், திமுக கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். பின் ஒவ்வொரு கட்சி தலைவரையும் தனித்தனியாக சந்தித்து, நன்றி கூறி வழி அனுப்பி வைத்துள்ளார். முதல்வர் நடத்திய ஆலோசனை குறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிகவையும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியையும் சேர்க்க திமுக விரும்புகிறது. ராமதாஸ் தலைமையிலான பாமகவும் இணைய விரும்புகிறது. இது தொடர்பாக ராமதாசிடம் போனில் பேசிய விபரத்தையும் முதல்வர் ஸ்டாலின் எடுத்து கூறியுள்ளார்.