அதிருப்தியை சமாளிக்க திமுக எடுத்த ஆயுதம் | DMK | Durai Murugan
தமிழக அமைச்சரவை சில தினங்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். புதிதாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சரவை மாற்றம் நடப்பதுக்கு முன் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது என ஸ்டாலின் கூறி இருந்தார். ஆனால் பல தரப்பிலும் ஏமாற்றத்துடன் தான் அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் தனக்கும் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் துணை முதல்வர் பதவி வழங்கினால் கனிமவள துறையை துரைமுருகன் விட்டு கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த துறையை விட்டு கொடுக்க அவர் முன்வராததால் துணை முதல்வர் பதவி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.