வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அழிவை நோயாக்கி தீ மு கா.
வியூக நிறுவனங்கள் கட்சியை தவறாக வழி நடத்துவதாக நிர்வாகிகள் புலம்பல்! DMK | Election Strategy | MK St
திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் தலைமையை குழப்புவதோடு, கட்சியை தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினர் புலம்புகின்றனர். இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: முழுக்க முழுக்க வியூக நிறுவனங்களை நம்பியே இந்த தேர்தலில் திமுக களமிறங்குகிறது. முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நிறுவனமான பாப்புலஸ் எம்பவர்மெண்ட் நெட்வொர்க் என்ற PEN நிறுவனம், ரிஷி ராஜ் சிங்கின் ஐ பேக் மற்றும் ராபின் சர்மாவின் சோ டைம் கன்சல்டிங் ஆகிய நிறுவனங்கள் திமுகவுக்காக தேர்தல் வேலையை செய்கின்றன. இவைத்தவிர முன்னர் திமுகவுக்கு வியூக வகுப்பு பணிகளை செய்த சுனில் கனுகோலு தலைமையிலான ஒரு டீம் தற்போது துணை முதல்வர் உதயநிதிக்கு வேலை செய்கிறது. ஆரம்பத்தில் கட்சிக்காக மீடியாக்களிடம் பேசுவது, சர்வே எடுப்பதுவுமாக இருந்த PEN நிறுவனம் தற்போது நிர்வாகிகளிடம் நேரடியாக பேசி வேட்பாளர் தேர்வையும் செய்கிறது. PEN ஆட்களை முதல்வரும் முழுமையாக நம்புவதால் அவர்கள் வைப்பது தான் கட்சிக்குள் சட்டம். #PoliticalStrategy #DMK #Election2026 #PoliticalConsulting #CampaignStrategy #TamilNaduPolitics #PoliticalAnalysis #DMKLeadership #PoliticalTrends #StrategyFirms #MKstalin #udhayanidhi #ipac #pen #dmk #admk
அழிவை நோயாக்கி தீ மு கா.