வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மானம், சூடு, சுரணை, தன்மானம் உள்ளவர்கள் அரசியலுக்கு தகுதியில்லை திருமாவளவன்.
ஆனால் பிளாஸ்டிக் சேர் ஓகே
எனக்கு மானம் பெரிது: திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் பளிச் | DMK | VCK | Election 2026
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சட்டசபை தொகுதிவாரியாக மாவட்டச் செயலர்கள், லோக்சபா தொகுதிவாரியாக மண்டல பொறுப்பாளர்கள் செயலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக, 39 மண்டலப் பொறுப்பாளர்கள், 144 மாவட்டச் செயலர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 6ல் நியமிக்கப்பட்டனர். அதில், சில மாவட்டச் செயலர்கள் நியமனத்திற்கு கட்சிக்குள்ளேயே பிரச்னை எழுந்ததால், மறுசீரமைப்பு இருக்கும் என அக்கட்சி தலைமை தெரிவித்தது. இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மாவட்டச் செயலர்கள் 144 பேர் அறிவிக்கப்பட்டதில், ஒன்பது பேர் மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், 48 பேர் மாவட்டச் செயலர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். மற்ற 96 மாவட்டச் செயலர்களின் பதவிக்காலம், 2026 ஜூலை மாதத்துடன் முடிவடையும். அதன்பின், நியமன முறையில் இல்லாமல், தேர்தல் முறையில் மாவட்டச் செயலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்ற 138 தொகுதிகளுக்கான மாவட்டச் செயலர்கள், 2028 வரை பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு, அதன்பின் தான் தேர்தல் நடக்கும். இத்தேர்தல், இரண்டு கட்டமாக நடக்கும். இனி நியமன முறை இருக்காது. புதிதாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளில், இளம் தலைமுறையினர், பெண்கள், மாற்று சமுதாயத்தினருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்திற்கு முதன்மை செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். இதற்கான பட்டியல், விரைவில் வெளியிடப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து எந்த சூழ்நிலையிலும் திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியலில் மானம் என்பதும் முக்கியம் தான். யாருக்காகவும், எதற்காகவும் கொள்கையை விட்டு விட்டு, யாரோடும் செல்ல முடியாது. தி.மு.க., கூட்டணியில் சீட்குறைவாக கொடுத்தால், அதில் என்ன பாதிப்பு இருக்கப் போகிறது? முடிந்தால் சண்டை போட்டு கூடுதல் சீட் வாங்குவோம்; இல்லையென்றால் அனுசரித்து செல்வோம். ஆனால், சீட் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணத்தில், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். இந்த திருமாவளவன் ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டான். கட்சியினர் ஒவ்வொருவருக்கும் இதுதான் எண்ணம் என திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #DMKAlliance #VIDUTHALAIChiruthaigal #TamilNaduPolitics #SeatSharing #DMKCoalition #ElectionStrategy #DravidianPolitics #TamilPolitics #AllianceTalks #VCKStatement #PoliticalNews #TamilNaduElections #CoalitionPolitics #NoExitFromAlliance
மானம், சூடு, சுரணை, தன்மானம் உள்ளவர்கள் அரசியலுக்கு தகுதியில்லை திருமாவளவன்.
ஆனால் பிளாஸ்டிக் சேர் ஓகே