அடுத்தடுத்து கட்சிகள் நெருக்கடி; திமுகவுக்கு தலைவலி ஸ்டார்ட் | DMK | DMK alliance | VCK | Congress
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம், செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. ராஜிவ் கனவுப்படி தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதே நம் நோக்கம். அதற்கான வாய்ப்பு எப்போது கிடைக்கிறதோ, அப்போது அந்த முயற்சியில் இறங்க வேண்டும். இதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டணி ஆட்சி பற்றியும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்தனர். திமுக தலைமையிடம், 20 சதவீத இடங்களை கேட்க வேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் பதவிகள் குறித்து குழு அமைத்து, திமுகவுடன் கறாராக பேரம் பேச வேண்டும். அதில் உடன்பாடு எட்டாவிட்டால் தனித்து போட்டியிடும் முடிவை தைரியமாக எடுக்க வேண்டும் என பேசினர்.