உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எல்லாத்துக்கும் உங்க காலில் விழ முடியாது; திமுக நிர்வாகி பேசிய ஆடியோ லீக் | DMK| Congress | TNelect

எல்லாத்துக்கும் உங்க காலில் விழ முடியாது; திமுக நிர்வாகி பேசிய ஆடியோ லீக் | DMK| Congress | TNelect

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சூரியபிரகாஷ் போட்டியிடுகிறார். பிரசாரத்துக்கு திமுகவினரே செலவிட வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிக்க நாம் ஏன் செலவிட வேண்டும் என திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக, திமுக நிர்வாகி ஒருவர் பேசிய ஆடியோ, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில் திமுக நிர்வாகி பேசி இருப்பது இதுதான்: என்னன்னா... ஊருக்குள்ள காங்கிரஸ் வேட்பாளர் கேன்வாஸ்க்கு வர்றாரு. எந்த செய்தியும் இல்லை; தகவலும் இல்லை. தனி மரம் தோப்பாகுமா. மாவட்ட செயலரும், ஒன்றிய செயலரும் என்ன அரசியல் பண்றாங்க. இதெல்லாம் கடைசி வரைக்கும் நீடிக்குமா. தராதரம் இல்லாம போயிக்கிட்டு இருக்கு. நான் தான் ராஜா; நான் தான் மந்திரின்னு இருந்தா, அழிவு வெகு சீக்கிரம் வந்துரும். அது உங்களுக்கு மட்டுமல்ல; எல்லாத்துக்கும் உண்டு. எனக்கும் தான்; உங்களுக்கும் தான். நீங்கள் வைத்திருக்கிற மாவட்ட செயலர், ஒன்றிய செயலருக்கும் தான். #Suryaprakash #CongressCandidate #Politics #Electioந்2026 #CampaignTrail #Voting #PoliticalSpeech #VoteForChange #Leadership #CommunityEngagement #DemocracyInAction #CandidateProfile #Elections #PoliticalAwareness #LocalLeader #Grassroots #SocialImpact #PoliticalCandidate #PublicService #dmk #dmkalliacne #audioleaked #dmkleader

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை