திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும் | DMK MP | Kamarajar | Tiruchi Siva
ென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா, காமராஜர் சாகும்போது கருணாநிதியின் கையை பிடித்து, நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார். அதே போல் காமராஜருக்கு ஏசி இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார் என பேசியது சர்ச்சையாகியது. திருச்சி சிவாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் இன்று காலை சிவா வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். காங்கிரஸ் தொண்டர்களிடம் திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோஷத்துடன் எம்பி வீட்டை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.