நமக்கு கிடைத்த புது ஸ்டார்; எலானை புகழ்ந்தார் ட்ரம்ப் Donald Trump | US Election | Elon Musk
I love you எலான் மஸ்க் நன்றி மறக்காத ட்ரம்ப்! எல்லாம் எலான் செயல் அமெரிக்க தேர்தலை உன்னிப்பாக கவனித்தவர்கள் ட்ரம்பின் வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல என்கிறார்கள். ஆரம்பம் முதலே போட்டிக்கு இடையேதான் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பைடன் எதிர்கட்சி வேட்பாளராக இருந்தவரை ட்ரம்புக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்பட்டது. ஆனால், பைடன் இடத்திற்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் வந்ததால் ட்ரம்புக்கு நெருக்கடி அதிகரித்தது. அந்த சமயத்தில்தான் கடந்த ஜூலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. காதில் குண்டு உரசி காயத்துடன் தப்பினார். 2வது முறையாக செப்டம்பரில் நடந்த துப்பாக்கி சூட்டிலும் தப்பினார். இந்த சம்பவங்கள் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தும், தொய்வு இல்லாமல் பிரசாரத்தை தொடர்ந்தார் ட்ரம்ப். அவருக்கு ஆதரவாக உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், வெளிப்படையாக ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். பிரசாரத்திற்கு 375 கோடி நிதி தருவதாக அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் எலானுக்கு வெள்ளை மாளிகையில் அமைச்சர் பதவி அல்லது ஆலோசகர் பதவி ரெடி என ட்ரம்ப் தன் பங்குக்கு அறிவித்தார். அந்த அறிவிப்பை ஏற்ற எலான் மஸ்க் நான் தயார் என சொன்னார்.