உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிரம்ப் - ஜெலன்ஸ்கி 1 மணி நேரம் பேசியது என்ன? | Donald Trump | Volodymyr Zelenskyy | Russia - Ukrain

டிரம்ப் - ஜெலன்ஸ்கி 1 மணி நேரம் பேசியது என்ன? | Donald Trump | Volodymyr Zelenskyy | Russia - Ukrain

புடினுடன் பேசிய சூட்டோடு லைனில் வந்த ஜெலன்ஸ்கி டிரம்புடன் 1 மணி நேர பேச்சு 3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக சவுதியில் கடந்த வாரம் உக்ரைன் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதித்தது. 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புடினும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்தார். அந்த நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுப்பதால் இரு நாடுகள் இடையேயான போர் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் தான் தற்காலிக போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷிய அதிபர் புடினும் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். 90 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனின் மின்துறை உள்கட்டமைப்புகள் மீது 30 நாட்கள் தாக்குதலை நிறுத்தி வைக்க புடின் சம்மதித்தார். இந்த பேச்சுவார்த்தை முடிந்த சூட்டோடு சூடாக டிரம்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல விதமாக இருந்ததாக டிரம்பே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை