சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர் மீது தொடரும் நடவடிக்கை USA - India Immigration | 487 Indians
மேலும் 487 இந்தியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா கடந்த ஆண்டு இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் அந்நாட்டு அதிபராக பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை அவரவர் நாட்டுக்கே திரும்ப அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்க விமானப்படை விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமெரிக்க விமானத்தில் 104 இந்தியர்கள் பஞ்சாப் வந்திறங்கினர்.