/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஆர்வம் இல்லாத பீகார் கட்சிகள் ECI | Bihar Election | Voter's List
வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஆர்வம் இல்லாத பீகார் கட்சிகள் ECI | Bihar Election | Voter's List
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடத்தப்பட்டு, இம்மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில், 7 கோடிக்கும் அதிகமானோர் வாக்காளர்களாக இடம் பெற்றிருந்தனர். மரணம், நிரந்த இடமாற்றம், இரட்டை பெயர் பதிவு என பல்வேறு காரணங்களால், 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகக்கு, காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமற்ற வாக்காளர்களின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆக 25, 2025