ஏ... அடிக்காதீங்க விட்ருங்க: ஆம்புலன்ஸ் டிரைவருக்கு எச்சரிக்கை | Edappadi | Admk | Anaikkattu
வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு பிரசாரம் செய்தார். அணைக்கட்டு பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச ஆரம்பிக்கும்போது ஒரு ஆம்புலன்ஸ் கூட்டத்தில் புகுந்தது. ஆம்புலன்சை பார்த்ததும் மக்கள் விலகி வழிவிட்டனர். ஆனால், ஆம்புலன்சில் நோயாளி இல்லை. காலியாக இருந்தது. அதைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆனார். நான் கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் ஆம்புலன்சை விட்டு கூட்டத்தை கலைக்கிறார்கள்; எவ்வளவு கேவலமாக திமுக அரசு நடக்கிறது பாருங்கள் என்றார், சீற்றத்துடன். ப்ரத் சிலர் டிரைவரை அடிக்க பாய்ந்தனர். விட்ருங்க என தடுத்த பழனிசாமி, அடுத்த முறை காலி ஆம்புலன்ஸ் வந்து டிஸ்டர்ப் பண்ணா டிரைவர்தான் பேஷண்டா போவணும் என பஞ்ச் டயலாக் பேசி எச்சரிக்கை விடுத்து அனுப்பினார்.