தேர்தல் தோல்வி ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு | Edappadi Palanisamy | ADMK Meeting | Party executives
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. சில இடங்களில் 3ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் ஆரணி, தென்காசி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது குறித்து கட்சியினர் கூறியதாவது, ஆரணி கூட்டத்தில் போளூர் ராஜன் என்பவர், மாவட்ட செயலர் ஜெயசுதா மீது சில குற்றச்சாட்டுகளை வைத்தார். அப்போது பழனிசாமி குறுக்கிட்டு, தனிப்பட்ட நபர்கள் குறித்து பேச வேண்டாம் என கண்டித்ததும், பேசுவதற்கு தானே கூட்டம் என அவர் எதிர்த்து பேச பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது துணை பொதுச்செயலர் முனுசாமி குறுக்கிட்டு, ஜெயலலிதா இருந்தால் இப்படி பேசுவீர்களா? பொதுச்செயலர் அமரச் சொன்னால் உடனே அமர வேண்டும் என அறிவுரை சொல்லி அமர வைத்தார். தென்காசி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டார். அதற்கு நிர்வாகிகள், ஒரே சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போட்டியிட்டதால், ஓட்டு பிரிந்து விட்டன. நம் கட்சி வேட்பாளரை களம் இறக்கி இருந்தால் வெற்றி கிடைந்திருக்கும் என்றனர்.