கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை! | Edappady Palanisamy | ADMK | Loksabha Election 2024
தொடர்ந்து வேலை செய்யுங்க! சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கும்! லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து, தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று காலையில் சிவகங்கை, வேலூர், மாலையில் திருவண்ணாமலை தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகளில் சிலர், பா.ஜ கூட்டணி சார்பில், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி பிரசாரம் செய்தனர். நாம் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாதது பின்னடைவை ஏற்படுத்தியது. பூத் கமிட்டிகள் சில இடங்களில் அமைக்கப்படவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை. கட்சியினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை என தெரிவித்தனர். பின்னர் பழனிசாமி பேசியதாவது: கட்சியில் எந்த கோஷ்டிப் பூசலும் இல்லை. துரோகத்தை வீழ்த்தி விட்டோம். எம்.ஜி.ஆர் கூட லோக்சபா தேர்தலில் தோல்வியை சந்தித்து உள்ளார். அதன்பின் வந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தார். எனவே, லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நாம் பலமான கூட்டணி அமைத்து, வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து, தேர்தல் பணியாற்ற வேண்டும். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுங்கள்.