போலீஸ் ஸ்டேசனுக்கே மெயில் அனுப்பிய ஆசாமி! | Eknath Shinde | Threat Mail | Maharashtra Deputy CM
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜ - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார். இந்த சூழலில் ஷிண்டேவின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மும்பையின் சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இ மெயில் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. மிரட்டல் விடுத்தது யார் என்பதை டிராக் செய்து போலீசார் விசாரிக்கின்றனர். ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் மெயில் அனுப்பப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஷிண்டேவுக்கும், அவரின் மகனும், எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கும் இது போல ஒரு கொலை மிரட்டல் வந்து இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், புனேவை சேர்ந்த 19 வயது சுபம் வர்கத் என்பவரை கைது செய்தனர். கொலை மிரட்டலை தொடர்ந்து ஷிண்டேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.