இரட்டை இலை விவகாரம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் | ADMK | Election Commission | EPS | OPS
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, அதிமுகவில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்கக்கூடாது. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து இருந்தார். தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி இருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் அமர்வு, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு நான்கு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.