உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார், உத்தராகண்ட்டில் பாஜவுக்கு சறுக்கல்! 7 State bye election results | BJP | Congress | AAP

பீகார், உத்தராகண்ட்டில் பாஜவுக்கு சறுக்கல்! 7 State bye election results | BJP | Congress | AAP

7 மாநிலங்களில் நடந்த 13 சட்டசபை இடைத்தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா 4 இடங்களில் வென்றது. பாஜ 2, ஆம் ஆத்மி 1, திமுக 1 இடங்களை கைப்பற்றிய நிலையில், பீகாரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் விக்ரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், பாமக இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தையும் பிடித்தன. பீகாரின் ருபவுலி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங், 68,070 ஓட்டுகள் பெற்றார். பாஜ கூட்டணி கட்சியான ஜேடியு வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல், 59,824 ஓட்டுகள் பெற்று, 8,246 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். முன்னாள் எம்எல்ஏவும், ஆர்ஜேடி வேட்பாளருமான பிமா பாரதி 30,000 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இமாச்சல பிரதேசத்தின் டேரா தொகுதியில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவின் மனைவியும், காங்கிரஸ் வேட்பாளருமான கமலேஷ் தாக்குர் 32,000 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் ஹோஸ்யார் சிங் 23,000 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். ஹமிர்பூரில் பாஜ வேட்பாளர் ஆசிஷ் சர்மா 1,571 ஓட்டு வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர வர்மாவை தோற்கடித்தார். நலாகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா, பாஜ வேட்பாளர் கே.எல்.தாக்கூரை விட 8,990 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் பாஜவின் கமலேஷ் பிரதாப் ஷா, காங்கிரசின் தீரன் ஷாவை விட 3,000 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்று முடிவின் போதும், பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பாகத் 37,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு பாஜவின் சீதல் அங்குரால் இரண்டாம் இடமும், காங்கிரசின் சுரிந்தர் கவுர் 3ம் இடமும் பிடித்தனர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ