அமைச்சர் பட்டாளம் இறங்காது! உதயநிதி திட்டம் இதுதான் | Erode East By-Election | DMK | Seeman
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ல் நடக்கிறது. 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. அதிமுக, பாஜ, தேமுதிக, தவெக போன்ற கட்சிகள் புறக்கணித்து களமிறங்கவில்லை. திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈ.வெ.ராமசாமிக்கு எதிராக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். திராவிடமா, தமிழ்த்தேசியமா, ஈவெரா புராணமா, பெரிய புராணமா என்ற பாணியில் தேர்தல் பிரசாரம் செய்ய சீமான் திட்டமிட்டுள்ளார். ஈவெரா எதிர்ப்பு கொள்கையை, சீமான் கையில் எடுத்துள்ளதால் அவரது கட்சிக்கு பாஜ ஓட்டுகள் மொத்தமாக விழ வாய்ப்புள்ளது. திமுக தரப்பு எதிர்பார்த்த ஓட்டுகளில் ஓட்டை விழும் என திமுக தரப்பிலும் அச்சம் அடைய துவங்கி உள்ளனர். இடைத்தேர்தலின் மொத்த ஓட்டுகளில் 80 சதவீதம் பெற துணை முதல்வர் உதயநிதி திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: சென்ற இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 65 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. இப்போது திமுக போட்டியிடுவதால் 80 சதவீதம் ஓட்டுகளை அள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லை. இதனால் அமைச்சர்கள் பட்டாளத்தை இறக்கவும் முதல்வர் விரும்பவில்லை. அவரும் பிரசாரத்துக்கு செல்லவில்லை.