இளங்கோவன் நண்பருக்கு சமயம் பார்த்து வீசும் அதிமுக, பாஜ | evks elangovan | congress | Bjp | admk
கட்சியும், பதவியும் வேண்டாம் காங்கிரஸ் நிர்வாகி அதிரடி முடிவு! ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக இருந்த, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் 14ல் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பின் அவரது மகன் சஞ்சய், இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவன் ஆதரவாளர்கள் விரும்பினர். அத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தராமல், திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனால், இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழக காங்கிரஸ் முன்னாள் பொருளாளரும், தற்போதைய துணைத் தலைவருமான நாசே ராமச்சந்திரன், இளங்கோவனின் நெருக்கமான நண்பர். இளங்கோவன் உயிரோடு இருந்தபோது, கடந்த லோக்சபா தேர்தலில், நாசே ராமச்சந்திரனுக்கு கடலுார் மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்று தர முயன்றார். ஆனால், அவரது பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது. விஷ்ணு பிரசாத்துக்கு கடலுாரிலும், வழக்கறிஞர் சுதாவுக்கு மயிலாடுதுறையிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த நாசே ராமச்சந்திரன், இளங்கோவனின் ஆதரவாளர்களை தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.