அடிபணிய மாட்டோம்; பூபேஷ் பாகல் கொதிப்பு Ex Chhattisgarh CM Son |Arrested | ED |son birthday|Bhupes
சத்தீஸ்கரில் 2019 முதல் 2022 வரை காங்கிரசை சேர்ந்த பூபேஷ் பாகல் முதல்வராக இருந்தார். அவரது ஆட்சியில் நடந்த மது ஊழல் மற்றும் பண மோசடி தொடர்பாக அமலாக்க துறை விசாரித்து வருகிறது. மது ஆலை நடத்தி வரும் பூபேஷின் மகன் சைதன்யா, அரசு மதுக்கடைகளுக்கு பிளாக்கில் மது வகைகளை சப்ளை செய்து, அரசுக்கு 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் வழக்கில் கடந்த ஜனவரியில் சத்தீஸ்கர் முன்னாள் அமைச்சர் கவாசி லக்மா உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்தது. துர்க் மாவட்டம் பிலாய் நகரில் உள்ள பூபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் சைதன்யா பாகல் ஆகியோரின் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். இச்சூழலில், சைதன்யா இன்று கைது செய்யப்பட்டார். பிறந்தநாளில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சைதன்யா வீடு முன் திரண்ட கட்சியினர், அமலாக்கதுறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மகன் சைதன்யா கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பூபேஷ் பாகல் கூறினார். என் மகனின் பிறந்தநாளில், உலகில் யாரும் தர முடியாத பரிசை மோடியும், அமித் ஷாவும் தந்து இருக்கிறார்கள் அதானியை மகிழ்விக்கவே, என் வீட்டுக்கு அமலாக்க துறையை அனுப்பி உள்ளனர். நாங்கள் பயப்படவும் மாட்டோம். தலைவணங்கவும் மாட்டோம். உண்மைக்காக போராடுவோம் என பூபேஷ் கூறினார்.