உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சேப்டி இல்லாமல் வாடகைக்கு ஆள் வைத்து ஆய்வு செய்வதாக புலம்பல் | food safety officer raid | ponneri

சேப்டி இல்லாமல் வாடகைக்கு ஆள் வைத்து ஆய்வு செய்வதாக புலம்பல் | food safety officer raid | ponneri

சென்னை மாநகராட்சியின் 31வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சங்கீதா. இவரது சொந்த ஊரான சிங்கிலிமேடு கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். மதிய விருந்துக்காக பொன்னேரியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையில் வாட்டர் பாட்டில்கள் வாங்கி இருந்தனர். அதில் ஒரு பாட்டிலில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா குடும்பத்தினர் குடிநீர் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த பொன்னேரி போலீசார் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் தண்ணீர் கம்பெனியில் ஆய்வு செய்தனர்.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !