உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! | French government collapses | Michel Barnier

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! | French government collapses | Michel Barnier

பதவி ஏற்ற 3 மாதங்களில் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது! பின்னணி என்ன? பிரான்ஸில் மூன்று மாதங்களுக்கு முன் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு பதவியேற்றது. சமீபத்தில் 2025ம் ஆண்டிற்கான பிரதமர் பார்னியர் முன்மொழிந்த பட்ஜெட்டிற்கு கடுமையான எதிர்ப்பு உருவானது. 50 பில்லியன் பவுண்டுகளை மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது தமது பட்ஜெட் என பார்னியர் தெரிவித்திருந்தார். இந்த சிக்கன நடவடிக்கைகள் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய தவறிவிட்டதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட்டுக்கு பார்லி உறுப்பினர்களிடமிருந்து ஆதரவு இல்லாத போதும் அதிபர் மேக்ரோனின் அனுமதியுடன் பட்ஜெட்டை எப்படியும் நிறைவேற்றுவேன் என பார்னியர் கூறியதே, எதிர்க்கட்சிகளை கோபம் கொள்ள வைத்துள்ளது. நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதில் ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் பலர் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர்.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை