பதிவு போட்டு துவக்கி வைத்தார் அண்ணாமலை! | GetOutStalin | Annamalai | Mkstalin | Udhayanidhi
கெட் அவுட் ஸ்டாலின் டிரெண்டிங்கில் முதல் இடம்! தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போது இனி கெட் அவுட் மோடி என சொல்வோம் என்று துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார். நீங்கள் சரியான ஆளாக இருந்தால் அப்படி சொல்லி பாருங்கள். உங்கள் வீட்டுக்கு வெளியே பால்டாயில் பாபு என போஸ்டர் ஒட்டுவேன் என அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த உதயநிதி தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள் என நேற்று சவால் விடுத்தார். திமுகவினரே நாள், இடத்தை முடிவு செய்யட்டும், நான் தனி ஆளாக வருகிறேன் என அண்ணாமலையும் எதிர் சவால் விடுத்தார். அதோடு உதயநிதி கெட் அவுட் மோடி என பதிவிட்டு உள்ளார். திமுகவினர் மற்றும் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி இதை பரப்பி வருகின்றனர். உங்களுக்கு 24 மணி நேரம் தருகிறோம். நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என நான் பதிவிடுகிறேன் நாளை மறுநாள் பாஜவின் பலம் தெரியும் எனவும் நேற்று அண்ணாமலை சவால் விடுத்து இருந்தார். அதன்படி கெட் அவுட் ஸ்டாலின் என அண்ணாமலை பதிவிட்டுள்ளது ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மற்றும் ஊழல் நடக்கிறது. தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றிவிட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலை திமுக அரசு நடத்துகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த திமுக அரசு விரைவில் மக்களால் வெளியேற்றப்படும் என அண்ணாமலை அந்த பதிவில் கூறி உள்ளார்.