உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தங்கத்தை அசால்டா ஆட்டைய போடும் CCTV காட்சி gold theft cctv video | thiruvanmiyur theft cctv footage

தங்கத்தை அசால்டா ஆட்டைய போடும் CCTV காட்சி gold theft cctv video | thiruvanmiyur theft cctv footage

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் 3வது மெயின் ரோட்டில் லால் சந்த் சிங் என்பவர் நகை கடை வைத்துள்ளார். 4ம் தேதி மாலையில் லால் சந்த் மகன் ஹேமந்த் குமார் கடையில் இருந்த போது, தம்பதி போல் ஒரு ஆணும், பெண்ணும் கடைக்கு வந்தனர். மகள் கல்யாணத்துக்கு நகை வாங்க வந்தோம். புதிய மாடல் நகைகளை காட்டுங்கள் என்றனர். ஹேமந்த் குமாரும் அவர்கள் கை காட்டிய டிசைன் நகைகளை எல்லாம் எடுத்து வைத்தார். நிறைய நகைகளை பார்த்த அந்த தம்பதி எந்த நகையும் வாங்கவில்லை. சில நகைகளை தேர்வு செய்திருந்தனர். வீட்டுக்கு போய்விட்டு திரும்ப வந்து வாங்குவதாக கூறி சென்றனர். அவர்கள் பார்த்த நகைகளை எல்லாம் மீண்டும் பாக்ஸில் அடுக்கி வைத்த ஹேமந்த் குமாருக்கு ஏதோ குறைவது போல் சந்தேகம். மீண்டும் நகைகளை சரி பார்த்தபோது, 20 தங்க நாணயங்களை காணவில்லை. மொத்தம் 44 கிராம் தங்கம் மிஸ் ஆனதால் அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். தம்பதி என்று கூறி வந்தவர்கள் நாணயங்களை லாவகமாக திருடுவது தெரிந்தது. நகை பார்ப்பது போல் பாக்ஸில் இருந்த தங்க நாணயங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, மடித்து கட்டிய தனது லுங்கியில் ஆசாமி போடும் காட்சி பதிவாகி இருந்தது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !