உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சுரங்கத்தில் தங்கியிருந்து ஆயுதங்கள் தயாரித்த ஹமாஸ் | IDF| hamas underground arm manufacturing plant

சுரங்கத்தில் தங்கியிருந்து ஆயுதங்கள் தயாரித்த ஹமாஸ் | IDF| hamas underground arm manufacturing plant

ஹமாஸின் சுரங்க ஆயுத ஆலை துவம்சம் செய்த இஸ்ரேல் படை! வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம் காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புலா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தும் ஈரானுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காஸாவில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், சுரங்கத்தில் செயல்பட்டு வந்த ஹமாஸ்களின் ஆயுத உற்பத்தி ஆலையை கண்டுபிடித்து உள்ளது. மிக நீளமான இந்த சுரங்கம் மத்திய காஸாவில் ஜெய்டவுன் zeitoun என்ற இடத்தில் இருக்கிறது. இங்குதான் ஹமாஸ்கள் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை தயாரித்துள்ளனர். லேத்கள், மிஷின்கள் உட்பட ஆயுத தயாரிப்புக்கு தேவையான அனைத்தும் இருந்தன. ராக்கெட்கள் அதற்கு தேவையான உபகரணங்கள், கையெறி குண்டுகள், டைவிங் உபகரணங்கள் தயாரிக்க தேவையான நூற்றுக்கணக்கான உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ