/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கு ஜிலேபி அனுப்பி பதிலடி | Haryana poll results | BJP orders jalebi
பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கு ஜிலேபி அனுப்பி பதிலடி | Haryana poll results | BJP orders jalebi
நடந்து முடிந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் - பாஜ இடையே கடுமையான போட்டி நிலவியது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே கூறின. ஆனால், ஆட்சியமைக்க தேவையான 46 இடங்களை விட அதிகமாக 2 இடங்களில் வென்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜ. காங்கிரஸ் 37 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 3வது முறையாக ஆட்சி அமைத்ததை, ஹரியானா பாஜவினர் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலின் டில்லி அலுவலகத்துக்கு ஜிலேபி பார்சல் அனுப்பி வைத்துள்ளனர்.
அக் 09, 2024